• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயுர் வேத சிகிச்சைக்கு கோவை வந்த ஜப்பான் நாட்டவர் மரணம்

December 23, 2019

ஆயுர் வேத சிகிச்சைக்கு கோவை வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் யுயிஷாரோ ஹீடோ (57) இவர் வழக்கமாக கோவை திருமலையம்பாளையம் அடுத்த ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியிலுள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்து இங்கேயே தங்கி சிகிச்சை பெற்று சென்று வந்தார். இதே கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்த அவர் கடந்த 20 ஆம் தேதி கோவை ரொட்டிகவுண்டனூர் தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடிரென யுயிஷாரோ மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலமாக கோவை ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்கள் இந்தியா வர இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்பதால் அவரது உடலை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். உறவினர்கள் வந்த பிறகே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க