• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் – திருமாவளவன்

December 16, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைபடுத்தவில்லை எனவும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் எனவும் கோவையில் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் 20 அடி உயரம் கொண்ட சுற்றுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழ்ந்தனர். இதற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் விதிகளுக்கு புறம்பாக திட்டமிட்டு தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளதாகவும், இதற்கு காரணமான உரிமையாளர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த சம்பம் தொடர்பாக போராடியர்வர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக நடைமுறைபடுத்தவில்லை என்றும் தலித்து மக்களுக்கு எதிராக அதிமுக அரசு செயல்லடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
குடி உரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் இது இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம் என தெரிவித்தார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அரசு பாசிசத்தை ஏவுகிறதாக குற்றம்சாட்டிய அவர், குடியுரிமை சட்டத்தை திரும்ப் பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க