• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவர் இடிந்து விழுந்த விவகாரம் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

December 11, 2019

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
வழக்குப்பதிவு செய்யக்கோரி பெரியார் கூட்டமைப்பு சார்பில் ஆட்சித்தலைவரிடம் புகாரளித்தனர்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் சுவற்றின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். அதே பகுதியைச்சேர்ந்த சிவ லட்சுமணன் என்ற இளைஞரை உதவி ஆய்வாளர் திலக் காவல் நிலையத்தில் வைத்து அடித்து , அவரது கையை நசுக்கி, விரலை ஒடித்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். 17 பேரின் இறப்புக்கு நியாயம். கேட்டு போராடிய 26 பேர் கைதை திரும்ப பெற வேண்டுமெனவும்,தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை குறிவைத்து தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியார் கூட்டமைப்புகள், தலித் அமைப்புகள்,வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சித்தாலைவரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க