• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் – 61 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

December 11, 2019

கோவை மேட்டுப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி இவரது மனைவி கமலா வேணி இவர்களது 15 வயது மகள் அங்குள்ள தனியார் பெண்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். தாயும் தந்தையும் வேலைக்கு சென்று விடுவதால் சில நேரங்களில் மகள் வீட்டில் தனியாகவே இருந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 61 வயதான சேக் பாவா என்பவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக உள்ள அந்தப் பள்ளி மாணவியிடம் பேச்சுக் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. கடந்த ஆறு மாத காலமாக அந்தப் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இதனை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்குப்பதிவு செய்து முதியவர் ஷேக் பாவாவை
போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க