• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது

December 9, 2019 தண்டோரா குழு

கோவையில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை பி.என். புதூரைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவரது மகன் சங்கரநாராயணன்(42). வழக்கறிஞரான இவர் கடந்த 2012-2017 வரை வெளிநாடுகளில் பணியாற்றி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் மகள் கனடாவில் விபத்தில் இறந்து விட்டதால் நாடு திரும்பிய இவர் அதன் பிறகு தனது சொந்த ஊரான பி.என் புதூரில் வசித்து வருகிறார்.

மனைவி மற்றும் மகள் இறந்த சோகத்தில் இருந்த சங்கரநாராயணன், கோவை ஆர்எஸ் புரம் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடம் நடத்திவருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தினம் பிரிவைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஆய்வாளர் முத்துமணி சங்கரநாராயணை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க