• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’தெலங்கானா பெண் மருத்துவர் கொலை… குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!’

December 6, 2019 தண்டோரா குழு

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

தெலுங்கானாவில் கடந்த நவ.,27 ல், தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். பின்னர் அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில்,குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது.குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க