• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வைத்து வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது

December 5, 2019 தண்டோரா குழு

கோவையில் தன்னுடைய தேவைக்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோவை ரத்தினபுரி, பக்தவச்சலம் வீதி, பகுதியில் வசிப்பவர் நாகராஜ் அவருடைய மகன் ரஞ்சித் (வயது 20), இவர் ஆட்டோ டிரைவர். அந்தப் பகுதியில் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் தன்னுடைய தேவைக்கு கஞ்சா செடிகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அந்த வாசனை அடிக்கவே அவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சற்று நேரத்திற்கு முன்பு போலீசார் அவர் வீட்டை சுற்றி வளைத்தன.

அப்பொழுது கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. உடனடியாக ரஞ்சித்தை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க