• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்தமிழகத்தில் டிச.3,4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

December 2, 2019 தண்டோரா குழு

தென்தமிழகத்தில் டிச.3,4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில்,இந்திய வானிலை ஆய்வு மையத்தின்,சென்னை மண்டல இயக்குநர்,பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையானது வலுப்பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும் 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தென் மேற்கு அரபிக் கடலில் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் நாட்களில் தென் தமிழகத்தில் நல்ல மழை பொழிவு இருக்கும். வடதமிழகத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும். குறிப்பாக டிசம்பர் 3, 4 தேதிகளில் அதிக மழை பொழிவை எதிர்பார்க்கலாம் என்றார்.

மேலும்,அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு,வடகிழக்கு பருவமழையானது,இதுவரை 40 சென்டி மீட்டர் பெய்துள்ளது.இயல்பான அளவு 36 சென்டி மீட்டர்தான். இது இயல்பைவிட 11 சதவிகிதம் அதிகமாகும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க