• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை செட்டிபாளையத்தில் நண்பர்களுடன் மது அருந்த சென்ற நபர் சடலமாக மீட்பு

November 30, 2019

கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் நண்பர்களுடன் மது அருந்த சென்ற நபர் சடலமாக மீட்பு, செட்டிபாளையம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமணன். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனியார் நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யும் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவரது நண்பர்களுடன் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் இரவு 12 மணிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் பேசி உள்ளார். இரவு முழுவதும் குமணன் வீட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை இலை கடை அருகே குமணன் இறந்த நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த செட்டிபாளையம் போலீஸார் உயிரிழந்த குமணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமணன் அடித்து கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க