• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமியை பாலியல் கொலை செய்த வழக்கு : கொலையாளி மனோகரனின் தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு

November 29, 2019 தண்டோரா குழு

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு கோவையில் பத்து வயது சிறுமியும் அவரது ஏழு வயது தம்பியும் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் அவரது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சிறுவன் உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் உறுதிசெய்யப்பட்டது. முன்னாள் பள்ளி வாகன ஓட்டுனர் மோகன்ராஜ், மோகனகிருஷ்ணன் என்பவரும் அவரது நண்பர் மனோகரன் கைது செய்யப்பட்டனர். முதலில் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் பின்னர் அச்சத்தின் காரணமாக அவர்களை கொலை செய்ததாகவும் அப்போது காவல் துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது நவம்பர் 9 2010 அன்று காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி வண்டியை நிறுத்துமாறு மோகன்ராஜ் மிரட்டினார் என்றும் அப்போது என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர் என்று பின்னர் காவல்துறை அதிகாரி கூறினார். அதன் பின்னர் மோகன் என்பவருக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்து இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இதையடுத்து மனோரன் டிசம்பர் 2 ஆம் தேதியை தூக்கிடும் படி கோவை மகளிர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தூக்கு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப 6 வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசிடம் சிறைத் துறை இடமும் கொடுத்த மனு மீது அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனோகரன் தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை இரண்டு தினங்களுக்கு முன்பு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ஆரம் டீக்கா ராமன் அமர்வு விசாரித்தது. அப்போது மனோகரனை தூக்கிலிடும் படி கோவையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது, மேலும் மனோகரன் மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க