• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாக்கடை நீர் கலக்காத குடிநீரை கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜி.எம்.நகர் பொது மக்கள்

November 27, 2019 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதிலுள்ள ஜிஎம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் மூன்று மணிநேரத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகமாக இருப்பதால், குடிநீர் வருகின்ற நேரத்தில் பிடிக்க முடியாமல் போவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50 க்கும் மேற்பட்ட பெண்கள், பாட்டில்கள் மற்றும் கேன்களில் சாக்கடை நீரை கொண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்ற போதும், அவர்கள் கொண்டு வந்த சாக்கடை நீரை கீழே கொட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆறு மாதமாக குடிநீரோடு சாக்கடை நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

குடிநீர் வரி உயர்த்திய மாநகராட்சி சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கி வருவதாகவும், வரி கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கும் மாநகராட்சி மக்களை கண்டு கொள்வதில்லை எனக்கூறி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க