• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் கண்காட்சி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

November 23, 2019 தண்டோரா குழு

கேசிடி கல்லூரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கோவை குமரகுரு கல்லூரி மற்றும் ஐரோபோசக்ரா அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டி மற்றும் கண்காட்சியை நடத்துகின்றன. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த கோல்ப் விளையாடும் ரோபோக்கள் மற்றும், வடிவங்களை சரியான இடத்தில் வைக்கும் ரோபோக்களை கொண்டு மற்ற பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஐரோபோசக்ரா அகாடமியின் நிர்வாக இயக்குநர் அருண் ராஜிவ் கூறுகையில்,

“ரோபோடிக்ஸ் குறித்த விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்தும் விதமாகவே இன்றைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் துறையில் மாணவர்கள் சாதிக்க இது ஒரு உந்துதல் கொடுக்கும். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்கிறோம்.” என்றார்.

மேலும் படிக்க