• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை – தமிழக அரசு விளக்கம்

November 22, 2019 தண்டோரா குழு

கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கோவையில் சமீபத்தில் முதல்வர் இபிஎஸ் வருகையையொட்டி சாலை ஓரத்தில் அதிமுக கொடிகம்பம் நடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அன்று காலை அந்த வழியாக மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் எதுவும் இல்லை எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை எனவும் tதமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து, விதிமீறல் பேனர் தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க