• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்

November 22, 2019

தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூறுகையில்,

தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தமிழில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது கீழமை நீதிமன்றங்களை பொருத்தவரை குறிப்பாக தமிழ் தான் பிரதானமாக இருக்கும் ஆனால் தமிழே தெரியாத ஒரு நபர் எப்படி அந்த பதவிக்கு விண்ணப்பித்து அங்கு வழங்கப்படும் வழக்குகளை கேட்டறிந்து தீர்ப்பு வழங்க முடியும் எனவே இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திரும்பப்பெற வேண்டும் மேலும் கீழமை நீதிமன்றங்களை பொருத்தவரை தமிழ்தான் பிரதான மொழியாக இருக்கின்றது எனவே தமிழ் தெரியாதவர்கள் அந்த பதவிக்கு விண்ணப்பித்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவே தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க