• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியநாயக்கன்பாளையத்தில் பஸ் – செங்கல் லாரி மோதல் – இருவர் படுகாயம்

November 18, 2019

கோவை சின்னதடாகம் பகுதியில் இருந்து இன்று காலை 9 மணியளவில் செங்கல் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது ஊட்டியில் இருந்து கோவையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எல்.எம்.டப்ள்யூ பிரிவு அருகே வரும்போது இரு வாகனங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் லாரி டிரைவர் மற்றும் பஸ் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பெண் பயணிகள் உட்பட 7 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அடிப்பட்ட டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் மோதிக்கொண்ட பஸ், லாரி ஆகிய இரு வாகனங்களும் நின்றதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் படிக்க