• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த பா.ஜ.க.வினர்

November 5, 2019 தண்டோரா குழு

தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் இன்று பாலாபிஷேகம் செய்தனர்.

தஞ்சையில் பிள்ளையார்பட்டி கிராமத்தில் 3 அடி உயரத்தில், கையில் எழுதுகோல் மற்றும் ஓலையுடன் திருவள்ளுவர் அமர்ந்திருக்கும் சிலை ஒன்று உள்ளது.இதற்கிடையில்,இந்த சிலை மீது சில மர்ம நபர்கள் நேற்று சாணி வீசி சென்றுள்ளனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நேற்று மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு உரிய மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிலையில், தஞ்சையில் மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் இன்று பாலாபிஷேகம் செய்துள்ளனர்

மேலும் படிக்க