• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

November 4, 2019 தண்டோரா குழு

டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3-ம் தேதி தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவருக்கும் போலீசார் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து இருதரப்பிலும் நடைபெற்ற கைகலப்பில் பலர் காயமடைந்தனர். இப்படியிருக்க வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு டெல்லி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இதில் டெல்லி போலீசாரை கைது செய்ய வலியுறுத்தியும், டெல்லி போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்தும் வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.அதேபோல காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக எங்களின் போராட்டம் தொடரும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க