• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த எச்.ராஜா

November 2, 2019 தண்டோரா குழு

பா.ஜ.க, தேசிய பொது செயலர் எச்.ராஜா, திமுக தலைவர் ஸ்டாலினை, சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இளைய மகளுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இதையடுத்து திருமண அழைப்பிதழை அனைத்து கட்சித்தலைவர்கள், கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்களுக்கு வழங்கிய நிலையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட முக்கிய திரையுலக பிரபலங்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிலையில், இன்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போற்றி கவுரவித்தார்.

மேலும் படிக்க