• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே கயிற்றில் கணவன் – மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை

October 30, 2019 தண்டோரா குழு

கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே கயிற்றில் கணவன் – மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணான்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் தனியார் பைப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் நிலகீரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் ஒராண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கேசவராஜின் தந்தை ஜெய்சங்கர் மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மேலாகியும் கேசவராஜ், கிருத்திகா தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தார் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது கேசவராஜ், கிருத்திகா இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க