• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் அலுவலகம் முழுவதையும் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்

October 29, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் இ ராசாமணி ஆட்சியர் அலுவலகம் முழுவதையும் ஆய்வு செய்தார்.

அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் நேரில் பார்வையிட்டு அங்கு கொட்டி வைத்திருந்த குப்பைகளையும்,தேவையில்லாத பொருட்களையும் அகற்றுமாறும், அந்தந்த அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும்,தேவையில்லாத பொருட்களை உடனடியாக அகற்றுமாறு அரசு அலுவலர்களிடம் கூறினார். நவம்பர் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடங்களையும்,தேவையில்லாத பொருட்களையும் அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஓய்வு அறைகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தும் இடங்களாக மாற்றித்தருமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் ராசாமணி.

பலத்த மழை பெய்த போதும்,மழையையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு அலுவலகமாக நேரில் சென்று ஆய்வு செய்தது பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

மேலும் படிக்க