• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வருகிறார் ரஷ்ய அதிபர் புடின் !

October 29, 2019 தண்டோரா குழு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார் செய்யும் வகையில், அவற்றிற்கு நீச்சல் பயிற்சி, மண்குவியலில் மண் குத்துதல், ஓட்டம், மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்துவிடுதல் போன்ற பயிற்சிகளை காளை வளர்ப்போர் பயிற்சி அளிப்பர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ( 2020) அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை, பிரதமர் மோடியுடன் இணைந்து ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளிடையே மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க