• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் பழனிச்சாமி தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து

October 26, 2019 தண்டோரா குழு

தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும் என முதல்வர் பழனிச்சாமி தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை மற்றும் பிற ஊர்களில் பணிபுரிவோர், ரெயில் மற்றும் பேருந்துகளின் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,

“தீபாவளி திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் அமையட்டும். தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும். நலங்களும், வளங்களும் பெருகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க