• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

October 18, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல போளுவாம்பட்டி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறுகையில்,

சிறுவாணி அணை பகுதியில் நல்ல மழை பெய்வதால் குற்றால அருவியிலும் சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதாலும் மரங்கள் விழும் சூழல் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே தடை உள்ளது.வெள்ளப்பெருக்கு குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நொய்யல் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதே பில்லூர் அணை 97 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து எப்போது வேண்டுமானாலும் நீர் திறக்கும் சூழல் உள்ளதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க