• Download mobile app
23 Aug 2026, SundayEdition - 3847
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

October 17, 2019 தண்டோரா குழு

தெரி, மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். நயன்தாரா, யோகி பாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, இந்துஜா, ஆனந்த் ராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களும், டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில்,இப்படம் அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். கார்த்தியின் கைதி படமும் இதே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க