• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலேசியாவில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

October 8, 2019 தண்டோரா குழு

மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

மலேசியாவில் கடந்த ஒரு வாரமாக உலக அளவிலான சிலம்பம் போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா, ஐரோப்பா, ஆசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியில் கம்பு சண்டையில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல பிரிவுகளில் நடத்தபட்டதில் 5 வயது முதல் 15 வரை வயதிலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை ஆஸ்ரம் பள்ளியில் இருந்து சென்ற 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு நாடுகளை வீழ்த்தி 18 தங்கப்பதக்கம், 15 வெள்ளி பதக்கம்,7 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.இவர்கள் அனைவரும் தமிழகமான தாயகத்திற்கு திரும்பி கோவைக்கு வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க