• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரவில் வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்

October 1, 2019 தண்டோரா குழு

கோவை உக்கடம் அருகே இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் குறித்த சி.சி.டி வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவையில் உக்கடம் சூப்பர் கார்டன் , பொன்விழா நகர் பகுதிகளில் வெளியே நிறுத்தி வைக்கும் இரு சக்கர வாகனங்களில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சூப்பர் கார்டன் அருகே வந்த இரண்டு வாலிபர்கள் அப்பகுதிக்குள் செல்போனில் பேசிக்கொண்டே நோட்டமிட்டபடி வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடி உள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இவ்வாறு இரவு நேரங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் , செயின் திருட்டு உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க