• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 28, 2019 தண்டோரா குழு

கோவை சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 640 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின், பட்டமளிப்பு விழா, சி.எஸ்.ஐ., ஆல்சோல்ஸ் சர்ச் அரங்கில் நடைபெற்றது.
சி.எஸ்.ஐ.பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் அனைவரையும் வரவேற்று பேசினார் . சிறப்பு விருந்தினராக நாக் கமிட்டியின் இயக்குனர் பொன்முடி ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

வாழ்க்கைத் தரம் முன்னேற மாணவர்கள் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் எனவும் கல்வி கற்பதோடு மாணவ, மாணவிகள் பன்முகத்தன்மையை அதிகம் வளர்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.தொடர்ந்து,அவர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் பல்கலைக்கழக அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது தொடர்ந்து 640 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டது.

விழாவில் கோவை மறைமாவட்ட முன்னாள் பிஷப் வில்லியம் மோசஸ் கல்லூரி செயலர் மிருணாளினி டேவிட் உட்பட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க