• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தென்னிந்தியத் திருச்சபையின் 73-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டம்

September 28, 2019

தென்னிந்தியத் திருச்சபையின் 73-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள சி.எஸ்.ஐ. ஆல் சோல்ஸ் ஆலயத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்னிந்திய திருச்சபை எனும் சி.எஸ்.ஐ. 73 வது ஆண்டு மற்றும் கோவை சி.எஸ்.ஐ.70 ஆம் நிறைவு மற்றும் கோவை தென்னிந்திய திருச்சபையில் பிஷப் திமோத்தி ரவீந்தர் ஏழு ஆண்டுகள் பூர்த்தி செய்தது போன்ற அனைத்து விழாக்களையும் ஒன்றிணைந்த முப்பெரும் விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஆல் சோல்ஸ் சி.எஸ்.ஐ.ஆலயத்தில் நடைபெற்றது.

சிஎஸ்ஐ கேத்தி பொறியியல் கல்லூரியின் செயலாளர் சுதன் அப்பாத்துரை வரவேற்ற விழாவில் சார்லஸ் சாம்ராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஆனி ஹேமலதா குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக சென்னை குருகுல இறையியல் கல்லூரி முதல்வர் ஜான் சாமுவேல் கலந்து கொண்டார். விழாவில் 70 வயதை கடந்த மூத்த ஆயர்களை கவுரப்படுத்திய பிஷப் திமோத்தி ரவீந்தர் 7 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள். மற்றும் 70 பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.விழாவில் பல்வேறு மறை மாவட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க