• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்பத்துடன் நான் செல்லும் பயணங்களை அரசுமுறை பயணங்களுடன் ஒப்பிடுவதா? – முக ஸ்டாலின்

August 28, 2019 தண்டோரா குழு

குடும்பத்துடன் நான் செல்லும் பயணங்களை அரசுமுறை பயணங்களுடன் ஒப்பிடுவதா? என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில், முதல்வர் பழனிசாமி 14 நாள் பயணமாக, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கும், துபாய் நகரத்திற்கும் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். வெளிநாடு செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின்,

எனது வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்துடன் நான் செல்லும் பயணங்களை அரசுமுறை பயணங்களுடன் ஒப்பிடுவதா? திமுக ஆட்சியில் வெளிநாட்டு பயணம் செல்லாமலேயே வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. ஆனால் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் முதலீடு கிடைக்காமல், தனிமரமாக அதிமுக அரசு தத்தளித்து வருகிறது. வெளிநாட்டு பயணம் சென்று முதலீட்டை பெற வேண்டிய நிலையில் உள்ளது. முதல்வரின் இந்த வெளிநாட்டு பயணத்தின் உண்மை நிலை என்ன? தமிழக மக்களிடையே நிலவி இருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையான பதில் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

மேலும் படிக்க