• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டதே பாஜக தலைவர்கள் மறைவுக்கு காரணம் – பிரக்யா சிங் தாகூர்

August 26, 2019 தண்டோரா குழு

பாஜகவில் சமீபத்தில் தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என்று தான் நம்புவதாக பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேட்டியளித்துள்ளார்.

பாஜகவின் வாஜ்பாய், மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் உடல்நலக்குறைவால் சமீபத்திய ஆண்டுகளில் காலமாகினர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமினில் வெளிவந்து விசாரணையை எதிர்கொண்டு வரும் போபால் பாஜக எம்.பி, சர்ச்சைக் கருத்துக்களுக்கு பெயர் போனவர்.

இந்நிலையில், போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் சமயத்தில் மகாராஜ்ஜி என்னிடம் வந்து, இது மிகவும் மோசமான நேரம். உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. இந்த சூழலில் நீங்கள் கவனமாக இருங்கள் என என்னிடம் கூறினார். நான் அதன் பிறகு அதை மறந்து விட்டேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது.கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர். மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்து பார்க்கிறேன். நீங்கள் நம்புவீர்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை. இது உண்மை என்றே தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க