• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் காவலர் தன்னை மிரட்டி பணம் கேட்பதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் புகார்

August 6, 2019 தண்டோரா குழு

கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் தன்னை மிரட்டி பணம் கேட்பதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணபுரிந்த கவிதா என்ற பெண் காவலருடன் தனிமையில் இருந்த சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. கவிதாவும் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில்,சிசிடிவி காட்சிகள் வெளியாகியது குறித்து கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவலர் கவிதா ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிசிடிவி விவகாரம் முடிவிற்கு வந்தது. இந்நிலையில் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் கவிதா என்ற பெண் காவலர் அறிமுகம் கிடைத்ததாகவும், அதன் பின் பெண்காவலருடன் பல இடங்களில் தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தனது அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியானதாகவும் இதை காரணம் காட்டி கவிதாவும், மைதிலியும் தன்னிடம் பணம் பறித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க