• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

August 5, 2019

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். தேசிய மருத்துவ ஆணைய மசோதா தரமற்ற மருத்துவர்களை உருவாக்கும் எனவும், மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தேவையற்றது எனவும் கூறிய மருத்துவ மாணவர்கள், அவற்றை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும் படிக்க