• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற புதிய முறையிலான வரன் திருவிழா

August 3, 2019 தண்டோரா குழு

புதிய வரன்களை தகுந்த முறையில் விசாரித்து மண முடிப்பது வரை உள்ள புதிய முறையிலான வரன் திருவிழா கோவையில் நடைபெற்றது.

அனைத்து சமுதாயத்தினரின் வரன்களையும் அமைத்து கொடுப்பதுடன் அவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி மணம் முடித்து வைக்கும் புதிய வகை மேட்ரி மோனி கோவையில் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவையொட்டி டிவைன் மேட்ரி மோனியின் ஒருங்கிணைப்பாளர்கள் சூசன் ராபர்ட் மற்றும் பூர்ணவள்ளி தலைமையில் நடைபெற்ற முதல் வரன் திருவிழாவில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான வரன் தேடுபவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் உறவுகளுக்குள் திருமணம் செய்வது சிறந்ததா? அல்லது திருமண தகவல் மையம் மூலமாக செய்யும் திருமணம் சிறந்ததா? எனும் தலைப்பில் திருமதி ஏஞ்சல் நடுவராக கலந்து கொண்ட சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள்,மற்றும் கிறிஸ்தவ கீதங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இது குறித்து டிவைன் மேட்ரிமோனியின் நிர்வாகி அனுக்கிரஹா கூறுகையில்,

ஏழை எளியோர்களுக்கு பொருளாதார உதவியுடன் திருமணம் செய்து வைக்கும் முயற்சியையும் தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க