• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி பாலியல் வழக்கு : ஒரே வரியில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி உச்ச நீதிமன்றம்

August 1, 2019 தண்டோரா குழு

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு, கோவையில் அக்கா முஸ்கான், தம்பி ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடன் ரித்திக்கும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் மோகன கிருஷ்ணன் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனை அளித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம் என்று ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் படிக்க