• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காபி டே கஃபே -வின் உரிமையாளர் விஜி சித்தார்த் மாயம்

July 30, 2019 தண்டோரா குழு

கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமாகியுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஃபி டே நிறுவனரும் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த். இவர் நேற்று சிக்மகளூரு வழியாக கேரளா செல்ல திட்டமிட்ட நிலையில், திடீரென அவர் மாயமாகி உள்ளார். சிக்மகளூருவுக்கு காரில் சென்ற சித்தார்த், அருகில் உள்ள ஜேப்பினா மோகரூ என்ற இடத்தில் காரை விட்டு இறங்கி போனில் பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அரைமணி நேரம் ஆகியும் அவர் திரும்ப காருக்கு வராததை அடுத்து அவரது ஓட்டுநர் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது.

இதனையடுத்து ஓட்டுநர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓ​ட்டுநரிடம் விசாரணை நடத்தி, தேடுதல் பணியை விரைவு படுத்தியுள்ளனர்.விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் கூறியதால், ஆற்றில் தேடும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் பிஎல் சங்கர் ஆகியோர், பெங்களூருவில் உள்ள எஸ்.எம். கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கர்நாடகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க