• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 24, 2019 தண்டோரா குழு

ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து, கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா,

இலாபகரமாக இயங்கும் இரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தென்னக ரயில்வேயில் சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை – கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில்கள் தனியாருக்கு கொடுத்தால் ரயில் டிக்கெட்களின் விலை உயரும் , 10 ரூபாய் பிளாட்பாரம் டிக்கெட் நூறு ரூபாயாக உயரும் எனவும் கூறிய அவர், இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தென்னக ரயில்வேயில் 30 ரயில் நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு ஒப்படைக்க உள்ளதாகவும், ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க