• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் 6 ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது குமாரசாமி அரசு!!

July 23, 2019 தண்டோரா குழு

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத அரசு தோல்வியை தழுவியது.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது . இதையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.

இதற்கிடையில், இன்று காலை 10 மணி முதல் மீண்டும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, கர்நாடக சட்டசபையில் 9 மணி நேர விவாதத்துக்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு 99 எம்எல்ஏக்களும் எதிராக 105 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். அரசுக்கு 99 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், ஆட்சி கவிழ்ந்தது. இதனால் பாஜக ஆட்சி அமைக்குமா? கர்நாடக பேரவை கலைக்கப்படுமா? அடுத்த முதல்வராக எடியூரப்பா பதவிக்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க