• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரதம்

July 19, 2019 தண்டோரா குழு

கோவையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியில் தமிழ்நாடு அரசு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றுவர்கள் பணி மூப்பு அடிப்படையில் வனப்பணியாளர்களாக பதவி உயர்வு அளித்து வந்த நிலையில், இம்முறை ரத்து செய்யப்பட்டு நேரடியாக வனப்பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமென அரசு அறிவித்துள்ளது. இதனால் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேரடியாக வனப்பணியாளர்கள் தேர்வு முறை ரத்து செய்யப்படுமெனவும் வேட்டைதடுப்பு காவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் 20 ஆண்டுகள் பணி புரிந்த வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சீருடையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க