• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாழடைந்த வீட்டில் இருந்து பீரங்கி குண்டு கண்டெடுப்பு

July 18, 2019 தண்டோரா குழு

கோவையில் பாழடைந்த வீட்டில் இருந்து இராணுவத்தில் பயன் படுத்தும் பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு 30 ஆண்டுகளுக்கு முந்தயது என்பதும் தெரிய வந்துள்ளது.

கோவை ராம்நகர் பகுதியில் நேற்று அதிகாலை தங்க நகைகடை அதிபத் லிஜோ சுங்கத் என்பவர் வீட்டின் அருகே இருந்த சந்தனமரத்தை மர்மநபர்கள் வெட்டி கடத்த முயற்சி செய்தனர்.அப்போது காவலாளி சப்தம் போடவே சந்தனமரத்தை போட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி ஒடியது.இது குறித்து விசாரிக்க கோவை காட்டூர் காவல்நிலைய காவல்துறையினர் அங்கு சென்ற ஆய்வு செய்தனர். அப்போது , அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் ஆய்வு செய்தனர். ராம்ஜி என்பவருக்கு சொந்தமான அந்த பாழடைந்த வீட்டினை சோதனையிட்ட போது பீரங்கி குண்டு போன்ற வெடிபொருள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் , கண்டெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் பீரங்கி குண்டு என்பதும், இது 30 ஆண்டுகளுக்கு முந்தயது என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த குண்டை பறிமுதல் செய்த கோவை மாநகர வெடிகுண்டு செயல் இழக்கும் வைக்கும் பிரிவினர் அதை ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.ராம்ஜி என்பவரின் குடும்பத்தினர் அனைவரும் வெளியூரில் இருப்பதால், பாழடைந்த நிலையில் உள்ள வீட்டில் யாரும் பல ஆண்டுகளாக வசிக்க வில்லை. பாழடைந்த நிலையில் உள்ள அந்த வீட்டில் இருந்து பீரங்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்ஜியின் உறவினர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றி போது பீரங்கி குண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க