• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

July 8, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மத்திய மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் பயிற்சி வழங்கபட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்புகள் பெற வழிவகை செய்யபட்டு வருகிறது.இதில் ஆட்டோமொபைல், கட்டுமானம், ஊடகம்,ஜவுளி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கோவை வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராஜாமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது.பலூன்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.இதில் 300ம் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு ஆணையர் லதா, இனை ஆணையர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க