• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் மஜித் காலனி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

July 4, 2019 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் வாளாங்குளம் கரையை ஒட்டி மஜித் காலனி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இந்த மஜித் காலனி குடியிருப்புகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மஜித்காலனியில் வசித்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் வெள்ளளூர், உக்கடம் கழிவுநீர் பண்ணை, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பெரும்பாலான மக்கள் மாற்று வீடுகளுக்கு குடி பெயர்ந்தனர். அந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் ஒரு சில குடும்பத்தினர் மட்டும் அந்த குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இன்று காலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறையினர் உதவியுடன் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இதற்கு ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்து வரும் ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வழங்கப்பட்டுள்ள வீடு வசதியாக இல்லை எனவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த வீடுகளை இடிப்பது தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அதிகாரிகளை பொருத்தவரை போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு மாற்று வீடுகள் வழங்கப்பட்டு முறைப்படி ஆக்கிரமித்து வீடுகள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க