• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு – விரைவில் விசாரணை

July 2, 2019

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.அந்த உத்தரவை எதிர்த்து திமுக, அமமுக தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க