• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி திரிபாதி, தலைமைச் செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ் நியமனம்

June 29, 2019 தண்டோரா குழு

நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற உள்ளனர். இந்நிலையில், நிதித்துறை கூடுதல் செயலாளராக இருக்கும் சண்முகம், தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதைப்போல், தமிழக டிஜிபி ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாதி, 11 மாதங்கள் டிஜிபியாக பதவி வகிப்பார் இவர் 1985ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தவர்.

மேலும் படிக்க