• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உ.பா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்திரவு

June 27, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டதாக உ.பா சட்டத்தில் கோவை போத்தனூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்துள்ளதாக கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, கடந்த 12ம்தேதி கோவை போத்தனூர் காவல்துறையினர் கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லாஹ் ஆகிய மூவரை சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மூன்று நபர்களும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியதாகவும்,தீவிரவாதச்செயல்களை அரங்கேற்றச்சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்’ போத்தனூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், இந்த மூன்று நபர்களையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் காவல்துறையினர் சார்பாக நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இன்று மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல் மூவரையும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்க