• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி தாய் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

June 25, 2019 தண்டோரா குழு

மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி தாய் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். கணவரை பிரிந்து தனது தம்பி வீட்டில் வசிக்கும் முனிரத்தினத்திற்கு பூங்கோதை என்ற 22 வயது மகள் இருக்கிறார். கோவை கற்பகம் கல்லூரியில் படிப்பை முடித்து திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாக கூறி தனது நண்பர்கள் பாரதி மற்றும் சாராவுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த பூங்கோதை கழுத்தில் சிலுவை அனிந்துள்ளார். முனிரத்தினம் விசாரித்த போது, தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி மீண்டும் யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இது குறித்து முனிரத்தினம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பூங்கோதையை போலீசார் அழைத்து விசாரித்த போது சுய விருப்பத்தின் படியே மதம் மாறியதாக கூறி இருக்கிறார்.

மேஜர் பெண் என்பதால் போலீசாரும் பூங்கோதை விருப்பப்படியே மீண்டும் திருச்சிக்கே அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மதம் மாறிய தனது மகள் பூங்கோதையை மீட்டு தரும்படி முனிரத்தினம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க