• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி !

June 21, 2019 தண்டோரா குழு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இந்திய அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்திற்கு எதிரான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.

இதற்கிடையில் இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் கேப்டன் கோ நட்சத்திர வீரர் சச்சினின் இமாலய சாதனை ஒன்றை நாளைய போட்டியில் முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலி இதுவரை சர்வதேச போட்டிகளில் 19,896 ரன்கள் குவித்துள்ளார். நாளைய போட்டியில் கோலி 104 ரன்கள் எடுத்தால், விரைவாக 20,000 ரன்கள் சேர்த்த சச்சின் சாதனைகயை முறியடிப்பார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் 20,000 ரன்களை ஸ்கோர் செய்ய 453 இன்னிங்ஸ் எடுத்து கொண்டார். கோலி இதுவரை 415 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 19,896 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகள், 222 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்னர் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களை கடந்ததன் மூலம், அதிவகேமாக 11,000 ரன்களை கடந்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க