• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருணாச்சல விமான விபத்தில் உயிரழந்த விமானபடை வீரருக்கு விமான படை அதிகாரிகள் அஞ்சலி

June 21, 2019 தண்டோரா குழு

அருணாச்சல விமான விபத்தில் உயிரழந்த விமானபடை வீரர் வினோத்தின் உடலுக்கு கோவை சூலூர் விமான படைத்தளத்தில் விமான படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் 3 ம் தேதி கிளம்பிய ஏ.என். 32 ரக விமானம் 13 விமானபடை வீரர்களுடன் அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் விபத்திற்குள்ளானது. இந்நிலையில் நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பபட்டது.விமான விபத்தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் உடல் சூலூர் விமான படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு உடல் கொண்டு சென்று இறுதிசடங்குகள் செய்த பின்னர் 12 மணி அளவில் தகனம் செய்யப்பட இருக்கின்றது.

மேலும் படிக்க