• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவையில் தமிழக எம்.பிக்கள் இன்று தமிழில் பதிவியேற்பு !

June 18, 2019 தண்டோரா குழு

மக்களவையில் தமிழக எம்.பிக்கள் இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.

17-வது மக்களவையின் முதற்கூட்டம் நேற்று கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர். மற்றும் ஸ்மிருதி இரானி, சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர்.

அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2-வது நாளாக இன்றும் எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர்.

இன்று தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். வடசென்னை எம்.பி, கலாநிதி வீராசாமி, தென் சென்னை எம்.பி, தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னை எம்.பி, தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பி, ஜி.செல்வம், அரக்கோணம் எம்.பி, ஜெகத்ரட்சகன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி, டாக்டர் செல்லக்குமார், தர்மபுரி எம்.பியாக செந்தில்குமார், திருவண்ணாமலை எம்.பி, சி.என்.அண்ணாதுரை, ஆரணி எம்.பி, விஷ்ணு பிரசாத், விழுப்புரம் எம்.பியாக, ரவிக்குமார், கள்ளகுறிச்சி எம்.பியாக கவுதம் சிகாமணி, சேலம் எம்.பியாக, எஸ்.ஆர்.பார்த்திபன், நாமக்கல் எம்.பியாக சின்ராஜ், ஈரோடு எம்.பியாக, கணேச மூர்த்தி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், திருப்பூர் எம்.பியாக, சுப்பராயன், நீலகிரி எம்.பியாக ஆ.ராசா, கோவை எம்.பியாக பி.ஆர் நடராஜன், பொள்ளாச்சி எம்.பியாக கே.சண்முக சுந்தரம், திண்டுக்கல் எம்.பியாக வேலுசாமி, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பியாக ஜோதிமணி, திருச்சி எம்.பியாக திருநாவுக்கரசர், பெரம்பலூர் எம்.பியாக டாக்டர் பாரிவேந்தர், கடலூர் எம்.பியாக டி.ஆர்.வி.எஸ் ரமேஷ், சிதம்பரம் எம்.பியாக தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை எம்.பியாக ராமலிங்கம், நாகப்பட்டினம் எம்.பியாக செல்வராஜ் உட்பட தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.

மேலும்,திமுக எம்.பிக்கள் கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க என்றும் கூறி பதவியேற்றனர். பெரும்பாலும் அனைத்து எம்.பிக்களும் தமிழ் வாழ்க என்று கூறி பதவியேற்றனர்

மேலும் படிக்க