• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக செயல் தலைவராக மூத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தேர்வு

June 17, 2019 தண்டோரா குழு

பாஜக செயல் தலைவராக மூத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமராக மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பா.ஜ. தேசிய தலைவராக உள்ள அமித்ஷா , மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த வருட ஆரம்பித்திலேயே அமித்ஷா தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் மக்களைவை தேர்தலை முன்னிட்டு அவரையே தலைவர் பதவியில் தொடர பா.ஜ., கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் மோடி தலைமையில் பா.ஜ. ஆட்சிமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில் பா.ஜ. செயல் தலைவராக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார். இதனால் தலைவர் பதவிக்கு வேறு யாரேனும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க