• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

June 14, 2019 தண்டோரா குழு

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பத்தில் பிறந்த ராதாமணி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து திமுக சார்பில் 2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் இருந்த ராதாமணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார். உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே ராதாமணியின் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 69. ராதாமணியின் மரணம் திமுக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கு.ராதாமணி மரணம் அடைந்ததால் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 100ஆக குறைந்தது.

மேலும் படிக்க